எடப்பாடி, ஜூன் 20-
ஜிஎஸ்டி மசோதாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிக்கப்பட்டதைக் கண்டித்து எடப்பாடியில் மாற்றுத்திறனாளிகள்ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஜிஎஸ்டி மசோதாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல், செயற்கை கால், சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்தும், இதனை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் எடப்பாடி பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் விக்டர் அருளானந்தம் தலைமை வகித்தார். சங்க தலைவர் வி.கே.வெங்கடாச்சலம் கண்டன உரையாற்றினார். இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் லோகநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜாத்தி, சங்க நிர்வாகிகள் பெரியண்ணன், கீதா உள்ளிட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply