மாட்டிறைச்சியை ஒழிக்க மாடு விற்பனைக்கு தடை விதித்துள்ளது மோடி அரசு. இதனால் கிழட்டு மாடுகளை விற்க முடியாமல் தமிழக விவசாயிகள்  தவிக்கிறார்கள். சந்தைக்கு கொண்டுபோய்விட்டு வாங்க ஆள் இல்லாததால் திரும்ப கொண்டுவந்திருக்கிறார்கள். இதனால்தான் கேரளம்,புதுச்சேரி போன்ற மாநிலங்கள் தடையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுள்ளன. தமிழக அரசும் அத்தகைய தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியும் ஒப்புக்கொள்ளவில்லை முதல்வர். இந்த அரசு பாஜக விற்கு பயந்துபோய்க் கிடக்கிறது, அதனால் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது என்பதை இது துல்லியமாகக் காட்டுகிறது.
அதன் கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு,கருணாஸ் ஆகிேயாரும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அப்போதும் வெட்கம் இல்லாமல்தான் இருக்கிறார்கள், என்னத்தச் சொல்ல. குதிரைபேரத்தில் ஆட்சி நடத்துபவர்கள் மாடுபேரத் தடைபற்றி கவலை கொள்வார்களோ?

-Ramalingam Kathiresan

free wordpress themes

Leave A Reply