மறைந்த பாபு ஜகஜீவன்ராம் மிக நீண்ட காலம் காங்கிரஸ் மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்தவர். கற்றறிந்த மேதை. சமஸ்கிருதம் கற்றவர்.
1976 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர்.. அப்பொழுது வாரணாசிப் பல்க்கலைக் கழகத்தில் சம்பூர்னானந் என்ற சமஸ்க்கிருத பண்டிதரின் சிலையை திறந்து வைக்க அழைக்கப் பட்டார். சிலை திறப்பு சம்பவம் 24-1-1978 ஆம் நாள் நடந்தேறியது.
மின் இணைப்பு வழியாக ஒரு சுவிட்சை அழுத்தி ஜகஜீவன் திறந்து வைத்தார்.
அவர் திறந்து வைத்த சிலை தீட்டாகி விட்டது என்று கூறி ‘சத்ரசங்’ என்ற பார்ப்பன அமைப்பைச் சார்ந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் கங்கையில் இருந்து நீரைக் கொண்டு வந்து சிலையில் ஊத்தித் தீட்டுக் கழித்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது செருப்புத் தைக்கும் கீழ் சாதிக் காரனுக்கு சம்ஸ்கிருத பண்டிதர் சிலையை திறக்க அருகதை இல்லை என்று கோசம் போட்டனர்.
இப்பொழுது காவிகள் தலித்தை ஜனாதிபதியாக ஆக்கினால் அற்புதம் நிகழுமா? தலித் ஊசியைக் கொண்டு தலித் கண்களில் குத்த ஏற்பாடு. தலித் ஜனாதிபதியா ஆனால் தலித்துக்கும் காவிக்கும் கொள்வதும் கொடுப்பதுமா நடக்கவாப் போகிறது. தலித்தை இத்தனை காலம் ஏமாற்றியது போதாதா. இன்னுமா எமாற்றுனும்.!

– ramalingam chinnasamy

Leave A Reply