தில்லி ,

தில்லியில் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள குர்கான் பகுதியில் திங்களன்று இரவு சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த பெண்ணை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடத்தி சென்று , ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசி சென்றனர். இதை பார்த்த சாலையில் நடந்து சென்ற ஒருவர் , காவலர்களுக்கு தகவல் கொடுத்தை அடுத்து, கவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply