சிவகங்கை,
சென்னையில் நடைபெற உள்ள தமிழர் உரிமை மாநாட்டிற்காக கீழடியில் நடைபெறும் பிடிமண் எடுக்கும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்தித் திணிப்பிற்கு எதிராக கிழடி அகழாய்வை பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில், சென்னையில் ஜூன் 26 அன்று நடைபெறவுள்ள தமிழர் உரிமை மாநாட்டிற்காக கீழடியில் பிடிமண் எடுக்கும் விழா இன்று 20.6.2017 கோடங்கி ஆட்டத்துடன் குழவி சத்தத்துடன் நமது கலாச்சரத்தையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் துவங்கியது. இங்கு எடுக்கப்பட்ட பிடிமண் மண் கலையங்கள் மாநாட்டிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
தமுஎகச மாநில துணைத்தலைவர் தோழர் ந.நன்மாறன் பிடிமண் எடுத்துக் கொடுக்க, பயணக்குழு பொறுப்பாளரும் மாநில துணை பொதுச்செயலாளருமான கே.வேலாயுதம் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்ம், துணைச்செயலாளர் ஸ்ரீரசா, வெண்புறா, விஸ்வேஸ்வரன், மருது பாரதி, ஜீவசிந்தன், சாத்தப்பன் இந்திய மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாநகர், புறநகர், சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற இந்நிகழ்வின் இறுதியில் கீழடி மண்ணில் புதைந்திருக்கும் வைகை நதிக்கரை நாகரீக தொல் தமிழர் வரலாற்றைக் காக்க, கருப்பு வேடமணிந்த கலைஞர்களின் கலைநிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.