சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி,“தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது ஜனநாயக படுகொலை. இந்த தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்து வருவது அதிமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகிறது” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதி திராவிடர், பழங்குடி யினர் மற்றும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆனால், தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்தில், வார்டுகள் மறுவரையறை செய்யப்படவேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து, திமுகதான் வழக்கு தொடர்ந்தது. அதை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம், தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க அனுமதி அளித்தது. இதை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மேல் முறை யீட்டு வழக்கு 12.07.2017 அன்று விசாரணைக்கு வர உள்ளது. தேர்தலை நிறுத்தியது திமுகதான்.

ஸ்டாலின்:                                                                                                                                                        இட ஒதுக்கீட்டில் அதிமுக அரசு செய்த தவறைதான் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினோம். நீங்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேர்தலை நடத்த தடைவிதித்தது.
அமைச்சர்: 24.10.2016 அன்றுடன் உள்ளாட்சிபிரதிநிதிகளின்  பதவிக் காலம் நிறைவடைய இருந்து நிலையில் அதற்கு முன்பாக,  தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. மீண்டும் திமுக வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் அறிவிக்கை முறையாக செய்யவில்லை எனக் நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.  இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  14.07.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதைத் தவிரபொதுநல வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது.

Leave A Reply