சென்னை,
மாட்டிறைச்சிக்கு மாடுகளை விறப்பனை செய்ய மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதனை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்மொழிந்து பேசினார்.  இதையடுத்து முதல்வரின் பதிலில் திருப்தியடையாத திமுக எம் எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளதால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மோடி அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, புதுச்சேரி, மேகாலயா போன்ற மாநில அரசுகள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதைத்தொடர்ந்து மாட்டிறைச்சிக்காக மாடுகளை விறக் இருக்கும்  தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்ட மன்றத்தில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாட்டிறைச்சி தடை குறித்த விவகாரம் நீதி மன்றத்தில் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசு தனது நிலையை எடுக்கும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் முதல்வரின் பதிலால் அதிருப்தியடைந்த அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமீம் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே நேற்றுஆளும் கட்சி எம்எல்ஏ  தங்கச் செல்வன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில் இன்றும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply