காபூல்;
ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தலிபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன்,அமெரிக்க படையினரும் இணைந்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில்,பக்ராம் மாவட்டத்தில் தாக்குதல் நடத்த ஆப்கன் வீரர்கள் நேற்று இரவு கும்பலாக சென்றனர். அப்போது, அவர்களை இடைமறித்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் எட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply