திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாசத்தை உமிழும் செயலில் ஈடுபட்டுவரும் நித்தியானந்தா சீடர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் வருமாறு:-
கடந்த ஜூன் 15 ந்தேதியன்று திருவண்ணாமலை பவழக்குன்று மலையில், தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகவும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றச் செல்வதாகவும், திருவண்ணாமலை நகர செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், செய்தியாளர்கள் பவழக்குன்று மலைக்கு சென்றனர். அங்கே ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசையை, வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் அகற்றினர்.

இதை செய்தியாளர்கள் பதிவு செய்து தங்கள் ஊடகங்களுக்கு செய்தியாக கொடுத்தனர்.  அதைபொறுக்காத நித்தியானந்தா சீடர்கள் சிலர், திருவண்ணாமலையில் சன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் பணத்திற்காக பொய் செய்தி பேசுகிறது. அது போல் மற்ற ஊடகங்கள் வேசித்தனமாக நடப்பதாகவும், தாசித்தனம் செய்வதாகவும், முகநூலில் கடந்த சில நாட்களாக பதிவு செய்து வருகின்றனர்.

ஊடகத்துறை மட்டுமல்லாது, முதுகெலும்பில்லாத மாவட்ட, மாநில நிர்வாகம் மூடிக்கொண்டு போக வேண்டும், காவல் துறைக்கு ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் அரசுத் துறைகளைப் பற்றியும் முகநூலில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நித்தியானந்தன் என்ற பெயரைக் கேட்டாலே, ஆபாசம், கிளுகிளுப்பு போன்ற செய்திகள் தான் சமூகத்திற்கு அதிகமாக தெரியவருகிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும்போது இந்த உண்மை புலனாகும், தற்போது, திருவண்ணாமலையில்  நித்தியானந்த சீடர்கள் என்ற பெயரில் முகநூலில் வெளியாகும் பதிவுகள் ஆபாசத்தின் உச்சத்திற்கே போய்க் கொண்டு இருக்கிறது.

இந்த போக்கை, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட்ஸ்  வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ஆபாசப் பதிவுகளை வெளியிட்ட நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசுத் துறைகளை பற்றி கேவலமாக சித்தரித்த கயவர்களை கைது செய்ய வேண்டும், இந்தச் செயலை கண்டித்து நித்தியானந்த சீடர்களின் ஆபாசப் பதிவுக்கு எதிர்ப்பாக, மாநிலக்குழு ஆலோசனைக்கு பின்னர், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply