சென்னை, ஜூன்                                                                                                                                           உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் 15 விழுக்காடு நூலகவரி உள்ளாட்சித் துறையிடம் இருந்து நூலகத் துறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். பேரவையில் திங்களன்று (ஜூன் 19) துணைக்கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில், ‘‘உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள நூலகங்கள் நூலகத்துறைக்கு மாற்றப்படும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்களிடம் இ-ரீடிங்கை ஊக்குவிக்க நூலகங்களில் வை-பை வசதி செய்ய வேண்டியதில்லை’’ என்றார். திமுக கொறடா அர.சக்கரபாணி எழுப்பிய துணைக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘‘அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் தொடங்கப்பட்ட நூலகங்i பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Leave A Reply