சென்னை ,

இன்று  சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள் :-

·கிராமப்புற மற்றும் நடுத்தர பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் .
·மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20 கணினிகள் வழங்கப்படும்.
· உயர்,மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் மற்றும் இதரபணிகள்ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும் .

உயர் கல்வித்துறை அறிவிப்புகள் :-

·40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
·அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதியதாக 238 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
·காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
·மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நீச்சல் பயிற்சி நிலையம் கட்டப்படும்.
·புதிதாக 7 அரசுக் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, புதிதாக 660 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கூட்டுறவுத்துறை அறிவிப்புகள் :-

·பயோ மெட்ரிக் முறைக்காக விரல் ரேகை இயந்திரம் வழங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
·114 கூட்டுறவு சங்கங்களுக்கான சொந்த கட்டடத்திற்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
·திருச்சி,தருமபுரியில் 15 மத்திய துணை கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
·மத்திய கூட்டுறவு சங்ககடன் உச்சவரம்பு ரு.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

வனத்துறை அறிவிப்புகள் :-

·வன உயிரின தாக்குதலால் உயிரிழக்கும் அதிகாரிகளின் இழப்பீடு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
·பவானி ஆற்றின் கரைகளில் நீர் தர ஆய்வு நிலையங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

Leave A Reply