சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்து பேசினார். பிறகு, அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதார்களுக்கு விரைவு (தட்கல்) மின்னிணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 10 ஆயிரம் விவசாயிகளுக்கு 6 மாத காலத்திற்குள் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மாநிலத்திலேயே முதல்வகையாக 500 மெகாவாட் திறன் கொண்ட சூரியப் பூங்கா ஒன்று துவங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தரப்படும்.

நேரடி பணி நியமனம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 300 உதவி பொறியாளர்/மின்னியல், 25 உதவி பொறியாளர்/சிவில், 300 தொழில்நுட்ப் உதவியாளர்/மின்னியல், 400 கள உதவியாளர், 250 இள நிலை உதவியாளர் (கணக்கு), 300 கணக்கீட்டாளர் இரண்டாவம் நிலை பதவிகளுக்கு தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

Leave A Reply