ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் இலவசமாக தங்கள் நிறுவன விமானத்தில் பறக்கும் பரிசை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள டமாம் நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (18.06.2017) கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் போயிங் 737 விமானம் 162 பயணிகளுடன் கிளம்பியிருக்கிறது. இந்த ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்திருக்கிறார்.
விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது கேரளாவைச் கர்ப்பிணி பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. விமானத்தில் விமானப் பணிப்பெண்களும், விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த செவிலியர் வில்சனும் பிரசவம் பார்த்தனர்.அப்போது அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனே இந்தச் செய்தியை விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க, விமானம் மும்பையில் தரையிறங்க அனுமதித்தனர். தற்போது, தாயும், சேயும் மும்பை விமான நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இருவரும் நலம் என்று அறிவித்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். மேலும் ஜெட் ஏர்வேஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது நடந்த முதல் பிரசவம் இதுவாகும். அதற்கு பரிசாக பிறந்த குழந்தையின் ஆயுட்காலம் முழுவதும் இலவசமாக தங்கள் விமானத்தில் பயணிக்கலாம் என்று ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply