சென்னை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் தலைவராக பா.சரவணத்தமிழன் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் ஞாயிறன்று (ஜூன் 18)  நடைபெற்ற பேரவைக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.விஜயகுமார் தலைமை தாங்கினார். வி.ரவிக்குமார் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன்,  மாவட்டச்செயலாளர் கே.எஸ்.கார்த்திக் உள்ளிட்டோர்  பேசினர்.

சுகாதார சீர்கேட்டிலிருந்து  வடசென்னை மக்களை காப்பாற்ற வேண்டும், இளைஞர்களின் உடல் ஆரோக்கியம் பேண விளையாட்டு மைதானங்களை உருவாக்கவேண்டும். மக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றவேண்டும், குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

புதிய நிர்வாகிகள்-
பேரவைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வடசென்னை மாவட்டத் தலைவராக பா.சரவணதமிழன், செயலாளராக கார்திக், பொருளாளராக தீபா (எ) ரவிக்குமார் உள்ளிட்ட 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது,

Leave A Reply