டாக்கா,

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் தென் கிழக்கில் உள்ள கக்ராச்சாரி மாவட்டத்தில் ஞாயிறு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் பலியாகினர். இதேபோல் , வட கிழக்கில் உள்ள மெளலிபஜார் மாவட்டத்தில், நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஆபியா பேகம்(50) மற்றும் அவரது மகள் ஃபாமிதா பேகம்(13) இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

Leave A Reply