லண்டன் ,

லண்டனில் பாதசாரிகள் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

லண்டனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதியில் இன்று  அதிகாலை  தொழுகையை முடித்துவிட்டு பலர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்று  நடைபாதையில் ஏறி பாதசாரிகள் மீது மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  காவலர்கள் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்  எனத் தெரிவித்துள்ளது.

Leave A Reply