சென்னை;
நடிகர் ரஜினிகாந்த்தை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திங்களன்று தமது கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார்.

ரஜினியுடன் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்குப் பின், அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்பது என் கணிப்பு; அதற்கான முழு தயாரிப்புகளை அவர் செய்து கொண்டிருக்கிறார்; அரசியலுக்கு அவர் வருவது குறித்து அதிகார பூர்வமாக விரைவில் அறிவிப்பார்” என்று கூறிய சம்பத், “ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவருக்கு துணை நிற்போம்; மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம்; கழகங்கள் இல்லா தமிழகத்தை கொண்டு வருவோம்” என்றும் தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply