மன்னார்குடி
நடப்பு அரசியலை பேசுகின்ற ஜோக்கர் திரைப்படத்தின் வடிவம் தமிழ் சினிமாவிற்கு புதிது. மிகப்புதிய வடிவம். இந்த படம் பேசும் மக்கள் அரசியல் ஆனால் இப்படத்தின் ஒரு காட்சியை கூட தொலைக்காட்சியில் போடாததுதான் இதற்குள் இருக்கும் மற்றொரு அரசியல். இதுதான் முக்கியம்.

அதாவது இப்போது இங்கு இருக்கக்கூடிய சினிமா வணிக அமைப்புகள் இதை தடை செய்யக்கூடிய எல்லா ஏற்பாடுகளையும் தனக்குள் கொண்டிருப்பதுதான் அது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு தமிழ்படத்திற்கு நேர்ந்தது. இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் குருநாதரும் இந்திய யதார்த்த சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் நிமாய் கோஷ் இயக்கிய ஒரு தமிழ்படம் இப்படத்திற்கு பாடல் எழுதியது ஜெயகாந்தன். இசையமைத்தவர் மக்களிசை கலைஞர் எம்.பி.சீனிவாசன் .சௌந்தரராஜன், சுசிலா, ஜானகி ஆகியோர்கள் இப்படத்தில் பாடியுள்ளனர். ஏளிய மக்களிடம் நிதி பெற்று கூட்டு முயற்சியில் பல ஜாம்பவான்கள் நடித்து பங்கேற்ற இப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் மக்கள் தலைவர் ஜீவானந்தம்தான்.

1960 இல் வெளிவந்த அந்த படத்தின் பெயர் பாதை தெரியுது பார். அந்தப் படம் ஏன் வெளியே பரவலாக தெரியவில்லை தெரியுமா? அந்தப்படத்தை வேறு யாரும் வாங்கி வெளியிட்டுவிடக்கூடாது என்பதற்காக அன்றும் இன்றும் திரைத்துறையில் ஜாம்பனாக இருக்கக்கூடிய ஒரு நிறுவனம். அப்படியே வாங்கி தாம்பரத்திற்கு வெளியே இரண்டு காட்சிகள் மட்டும் ஓட்டிவிட்டு முடக்கிப்போட்டது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் நவீன யதார்த்த சினிமாவை அன்று 1960-இல் முடக்கப்போட்டதுதான் அதற்குள் இருக்கும் அரசியல். ஆனால் பாதை தெரியுது பார் என்ற அந்த படம்தான் அந்த ஆண்டில் தேசிய விருதுபெற்ற படம்தான் மொழி பெயர்க்கப்பட்டு சோவியத் யூனியனில் திரையிட்பட்டது. பாதை தெரியுது பார் இரண்டு காட்சிகளில் மட்டும்தான் மக்களிடம் சென்றது.

ஆனால் ஜோக்கர் மிகப்பெரும் மக்கள் திரள் மத்தியில் வெற்றிகரமாக இன்று சென்றடைந்துள்ளது. மிகச்சிறந்த யதார்த்த அரசியலை பேசும் திரைப்படம்தான் ஜோக்கர். எனவேதான் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த படம் என்ற விருதினை ஜோக்கர் திரைப்படத்திற்கு தமுஎகச வழங்கியது. இன்னும் விரிவாக மக்களிடம் இப்படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் எல்லா கிளைகளிலும் இயக்குநர் ராஜுமுருகன் அழைத்து பாராட்டி பெருமை செய்கிறோம். அவரது மக்கள் கலைப்பயணம் தொடர்ந்து வெற்றிபெற வாழத்துவோம்.

17.6.2017 மாலை துவங்கிய கலை இலக்கிய பேரணிக்கு ஆப்டெக் ப. ரமேஷ் தலைமை வகிக்க வண்டல் கலைக்குவினன் அதிரடி தப்பாட்டம் முன்செல்ல பாரதிதாசன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தாளாளர் கி. அன்பழகன் துவக்கி் வைத்தார். துவக்க நிகழ்ச்சிகளுக்கு கிளை தலைவர் கவிஞர் சரசுவதி தாயுமானவன் தலைமை வகித்தார். செயலாளர் உ.சு. பொன்முடி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இரா. தாமோதரன் துவக்கவுரையாற்றனார். கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் பேரா. காமராசு தமுஎகச மாவட்ட தலைவர் கு். வேதரெத்தினம் பாராட்டுரை வழங்கினர். . சமூக ஆர்வலர் ஐ.வி.நாகராஜனின் படிப்பு வட்டம் என்னும் நுலினை மாவட்ட பொருளாளர் மா.சன்முகம் வெளியிட அசோகா சிசுவிஹார் மெட்ரிக் பள்ளியின் தாளார் எம்.ஜி.வெங்கட்ராஜன் பெற்றுக்கொண்டார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையன் பொதுச் செயலாளர் பு.தா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்விக்குறியாகும் கல்வி உரிமை என்னும் தலைப்பில் கலையிரவில் சிறப்புரையாற்றினார். கரிசல் கருணாநிதி குழுவினரின் நாட்டுப்புற நல்லிசையும் முனவர் ந. லெனினின் தனியிசையும் நடைபெற்றன. புதுகை பூபாலன் கலைக்குழுவின் நாட்டு நடப்பு நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

”நெல்லு விளையட்டும்” நாடகம்

தேனி ”செவக்காட்டு கலைக்குழு”-வின் ”நெல்லு விளையட்டும்” நாடகம் கலையிரவு மக்களை சோகத்தில் உறைய வைத்தது. கடன்காரர்களின் வசைமாரிகளை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தின் சோகத்தை விவரித்த விளையட்டும் நாடகத்தைப் போன்று வேறு ஒரு கலை வடிவம் இதுவரை வந்திருக்குமா என்பது சந்தேகமே. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணவனைத் தேடி மாமா எம்புருஷனை காணோம் பார்த்தீங்களா அண்ணே நீங்களாவது அவரை பார்த்தீங்களா என்று ஒவ்வொருவராய் கேட்டுக்கொண்டே அழுது அரற்றிக்கொண்டே செல்வதும் கடைசியில் தூக்கில் தொங்கும் கணவனை பார்த்து நிலத்தில் வீழ்ந்து கதறும் காட்சிகளில் விவசாயி வீரண்ணன் மனைவி பாத்திரத்தில் நடித்த தோழர் பிரேமலதாவை கலையிரவு மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். தோழர் பிரேமலதாவின் நடிப்பின் ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் உணர்வு நிலையை நாம் திரும்பி கவனிக்கும்போது ஏராளமானோர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். டெல்டா மாவட்ட கிராமங்களைச் சுழ்ந்திருக்கும் இச்சோகங்களை கண்டுணர்ந்தவர்களில் பலர் விம்மினர். குறிப்பாக பெண்கள் மௌனமாக விக்கித்து கண்ணீர் மல்க அழுததையும் பார்க்க முடிந்தது. பின்னரவில் கலையிரவு நிகழ்ச்சிகள் முடிந்தபோது கா.வீ. பாஸ்கரன் நன்றி கூறினார்.

Leave A Reply