திருவனந்தபுரம்,
கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் வீட்டில்  ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளமாநிலம் கோழிகோடு மாவட்டத்தில் கட்சியின் முன்னணி ஊழியராக இருந்து வருபவர் திணேசன். இவர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி வருகிறார். தொடர்ந்து பஜ்ரங்தள் கும்பலின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தி வருபவர். இவரை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் குழுவினர் இன்று அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர். இதுகுறித்து  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply