கோவை, ஜூன்.

வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவிற்கு, உழைக்கும்  வர்க்கத்தை திரட்டி அரசியல் செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் போராட்டங்கள் மூலம் பதிலடி கொடுக்கும் என  டி.கே.ரங்கராஜன் எம்பி கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை  மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  கோவை மாநகர காவல் ஆனையர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி ஆகியோரை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்பி, பி.சம்பத் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர்.  இதில், குண்டு வீச்சுக்கு காரணமான சமூக விரோதிகள் மற்றும் அவர்களின் பின்னனி குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்சி அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை  காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து காந்திபுரம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து டி.கே.ரங்கராஜன் எம்பி பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

கோவை மாவட்ட சிபிஎம் மாவட்டக்குழு  அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஆத்திரத்தை தூண்டும் முயற்சியில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபடுகின்றன எனவும் குற்றச்சாட்டினார்.

மேலும், இந்த குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து  உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக, திராவிட கழகம்உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். மக்கள் நலனுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும்போது இதுபோன்று அனைத்து இயக்கங்களும் ஓன்று பட்டு குரல் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். நடைபெற்ற குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் திறமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதேநேரத்தில் காவல்துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதும், காவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையால் திறன்பட செயலாற்ற முடியாத நிலையும் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தமிழக அரசு உடனடியாக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி இத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னனியில் இந்துத்துவா தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வதற்கு காரணம் சமீபத்தில் எங்களுக்கு நேர் எதிரி மார்க்சிஸ்ட் கட்சி என பாஜகவின் தேசியத்தலைவர் அமித்சாவே வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், அவர் கேரளாவும், திரிபுராவும் அடுத்த எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார். இதன்காரணமாகவே திரிபுராவில் மலைவாழ் மக்களோடு இதர பிரிவினரை மோதவிட்டு பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இதேபோல கேரளமாநிலம் கண்ணனூரிலும் இதுபோன்ற வகுப்பு மோதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட வேனுகோபால் கமிசன் அறிக்கை இன்றுவரை இருக்கிறது. இதில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட வாக்குமூலங்களை கண்டாலே இந்த கட்சியின் செயல்பாட்டை உணர்ந்து கொள்ள முடியும் என்றார்.

வன்முறையை தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் கட்சி பாஜக என்பதும், பாஜகவிற்கு அதன் அரசியல்மீதும், தத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் அதனை மக்களிடம் கொண்டு சென்று வெற்றிபெருவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. அதேநேரத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயத்தை தேடுகிற வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாகத்தான் கோவையில் இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றார். அந்த மாநிலங்களில்  பிரச்சினைகளை ஏற்படுத்துவதே பாஜகதான் எனவும் குற்றம்சாட்டினார். பாஜகவிற்கு அதன் அரசியல்மீதும், தத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் அதனை மக்களிடம் கொண்டு சென்று வெற்றிபெருவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. அதேநேரத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயத்தை தேடுகிற வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.

இது மக்கள் நலனுக்கு எதிரானது அதனை ஒன்றுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி முறியடிக்கும் என்றார். மேலும், வன்முறையின் மீது நம்பிக்கை கொண்ட பாஜகவை உழைக்கும் வர்க்கத்தை திரட்டி போராட்டம் நடத்துகிற மார்க்சிஸ்டுகள் மக்கள் போராட்டங்களின் மூலம் எதிர்கொள்ளும் என்றார்.

ஹமூன்றாண்டு பாஜகவின் ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புக்குள்ளான பல்வேறு பிரிவு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதே பாஜகவிற்கு நாங்கள் கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என்றார். மேலும், பந்தை அடிக்க அடிக்கத்தான் உயரத்திற்கு எழும்பும் என்றும், தீட்டத்தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும் என்பதைப் போலசவால்களை சந்திப்பது எப்படி என்பது கம்யூனிஸ்டுகளுக்கு தெரியும் .  ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் வர்த்தகர்கள்,வியாபாரிகள், கைத்தறி, விசைத்தறி,பஞ்சாலைகள், கிரைன்டர், மோட்டார் என பெரும் பகுதி தொழில்கள்  பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பின்னர்  பாதிப்பு இன்னும் அதிகமாகும், மேலும்,விலைவாசி கடுமையாக உயரும் இதிலிருந்து மக்களை காக்க மத்திய அரசிற்கு எதிராக கடுமையானபோராட்டங்களை மக்களை திரட்டி போராடுவோம்மே  என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர் கேட்டதற்கு

தமிழகத்தில் அரசு நடைபெறுகின்றதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது.  தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்ற வருத்தம் இப்போதுதான் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்கலாம் எனவும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்தார். மதுக்கடைக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் வரவேற்கதக்கது எனவும் தங்கள் கட்சி அதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply