போர்ச்சுகல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டி உள்ளது.
போர்ச்சுகல் நாட்டின் பெட்ரோகா கிராண்டே என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் ஞாயிறன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள்ளேயே மளமளவென தீ பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அங்கு காரில் சென்றவர்கள் பலர், இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து, தீயணைப்பு வாகனம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவைகள் மூலம் சுமார் 1,600 வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சில தீயணைப்பு வீரர்களும் சிக்கியிருப்பதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று அங்கு பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியிருக்கிறது. கடுமையான அனல் காற்றும் வீசியிருக்கிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து . அந்நாட்டு பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்துக்காக அங்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Leave A Reply