சென்னை:
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியாராஜனுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு மீது வழக்க தொடர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடத்திய பெண்கள் மீது கண்மூடித்தனமாக ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ள சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டதாகவும், இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசுக்கு எதிராக தொடர அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் கோரினார். இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.

Leave A Reply