சேலம், ஜூன் 18-

சேலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டசாலைகளை விரைந்து சீர்படுத்திட மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மேற்குமாநகர 5வது மாநாடு ஞாயிறன்று மாநகர தலைவர் ரேவதிதலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.ராஜாத்தி கொடியேற்றி துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாநகர செயலாளர் கணேசன், மாதர்சங்க தாலுகா செயலாளர் டி.பரமேஷ்வரி, சமயம் அமைப்பின் நிர்வாகி ரூபினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநகரசெயலாளர் ஆர்.ஜெயமாலா, பொருளாளர் மைதிலி ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்து பேசினர். இம்மாநாட்டில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

காசக்ஃகாரனூர், அம்மாசிநகர், கோரிக்காடு, இராவனேஷ்வரா நகர் பகுதிகளில் சாக்கடைவசதியை மேம்படுத்திட வேண்டும். ரேசன் கடை முறைகேடுகளை களைந்திட வேண்டும். சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்த புதிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வுஇதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நகர தலைவராக ஜி.மகேஷ்வரி, செயலாளராக ஆர்.ஜெயமாலா, பொருளாளராக எ.ராணி மற்றும் உதவி தலைவர் வி.ரேவதி, உதவி செயலாளர் சுசிலா உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாவட்ட தலைவர் ஐ.ஞானசௌந்தரி நிறைவுரையாற்றினார்.

Leave A Reply