புதுதில்லி,
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் தேவ் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ராம்நாத் தேவ் 1945ம் ஆண்டு பிறந்தவர்.இவர் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்போடு இணைந்து இருந்து வந்தவர். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். பாஜகவின் தலித் மோட்சா என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தவர். 1994ம் ஆண்டில் இருந்து 2006 ம் ஆண்டு வரை இரு முறை ராஜ்யசபா உறுப்பினராக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த முக்கிய நபர்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ராம்நாத் கோவிந்த்  பீகார் மாநில ஆளுநராக பதவி நியமணம் செய்யப்பட்டார்.

தற்போது இந்தியா முழுவதும்  பாஜகவின் தலித் விரோத நடவடிக்கையால் தலித் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அதனை சரி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையில் ஆர்எஸ்எஸ் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Leave A Reply