பாட்னா ,

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர். இது குறித்து பள்ளி மாணவி அளித்துள்ள புகாரில் , வெள்ளியன்று இரவு எனது வீட்டிற்கு அருகே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை கடத்தி , அருகில் இருந்த வயல் பகுதிக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கிருந்த 6 -7 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து நான் மயக்கமடைந்துவிட்டேன். பின்னர் மயக்கம் தெளிந்து நான் கண் விழித்து பார்த்த போது, நான் ஓடும் ரயில் இருந்தேன். அப்போது என்னுடன் இருந்த இரண்டு போர் என்னை ஓடும் ரயிலில் இருந்து கீழே வீசினர். இதனால் நான் மறுபடியும் மயக்கமடைந்தேன். என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில்  2 பேர் என வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவியின் சகோதரர் , மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த எனது தங்கையை முதலில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு ஒரு நாள் முழுவதும் அவருக்கு சிகிச்சை , படுக்கை வசதி என எதுவும் செய்து தரப்படவில்லை. படுக்கை வசதி செய்து தர அங்கிருந்த ஊழியர்கள் என்னிடம் பணம் கேட்டனர். பின்னர் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து தான் , எனது தங்கைக்கு படுக்கை வசதியும் , முறையான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக  காவலர்கள் , பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அடையாளம் தெரிந்ததாக கூறிய இருவரும் அவருடன் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் . இதில் ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றவர்கள் தேடி வருகிறோம் என்றனர்.

Leave A Reply