அபுஜா ,

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள முகாம் மீது போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் போர்னோ மாநிலம் கோபா கிராமத்தில், தலோரி முகாம் உள்ளது. போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீடுகளை இழந்தவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம் அருகே இன்று போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply