திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமானநிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 10 கோடி மதிப்பிலான 5 கிலோ கேட்டமைகளை கடத்தவிருந்த மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட கோவிந்த மூர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply