குடியரசுத்தலைவராக ஒரு தலித் வேட்பாளரை அறிவித்தது ராஜதந்திரம் என பாஜக நினைக்கலாம். ஆனால் தலித்துகள் ஏமாளிகள் அல்ல.

ஒட்டுமொத்த தேசமும் ’ஊனா’வாகவும், சஹரான்பூராகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில், செத்த மாடுகளுக்கு பாதுகாப்பும், தலித் வீடுகள் எரிக்கப்படுவதுமான வன்முறைகள் நடந்துவருகின்ற சூழலில்.

ரோஹித் வெமுலாக்கள் ஒதுக்கப்பட்டு, தற்கொலைக்குத் தள்ளப்படும் சூழலில், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராவதில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

தேர்தல் அரசியலில், தலித்துகளை முன்நிறுத்துவது வேதனைக்கு மருந்தாகாது.

எந்த சமூகம் கொல்லப்படுகிறதோ, சித்ரவதை செய்யப்படுகிறதோ, வெட்டிக் கூறுபோடப்படுகிறதோ, அந்த சமூகத்திலிருந்தே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது உண்மையில் இந்தியாவின் ‘தனித்துவம்’தான்.

– ஜிக்னேஸ் மேவானி எழுதியதிலிருந்து … (எனக்கு புரிந்த அளவில் தமிழில் சாரமாக கொடுத்துள்ளேன்)

  • Sindhan R

Leave A Reply