நமது மொழி உரிமைக் கோரிக்கைகள்

1.இந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழி என்பதற்குப் பதிலாக எட்டாவது  அட்டவணையின் 22 மொழிகளையும் அலுவல் மொழிகள் ஆக்கவேண்டும். அதைப் படிப்படியாகவேனும் அமுல்படுத்த வேண்டும்.
2.கூடுதல் அலுவல்மொழி ஆங்கிலம் எனும் இடைக்கால ஏற்பாடு தொடரவேண்டும்.
3.இந்தியை வளர்ப்பதற்கான நாடாளுமன்றக்குழு 22 மொழிகளையும் வளர்ப்பதற்கான நாடாளுமன்றக் குழுவாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
4.தமிழக உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாகத் தமிழ் அங்கீகரிக்ப்படவேண்டும் எனும் தமிழகத்தின் கோரிக்கையை மத்தியஅரசு உடன் ஏற்று அமுல்படுத்த வேண்டும்.
5.இந்தித் திணிப்பு வேலைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும்.
6.நாடாளுமன்றத்தில் நினைத்தவுடன் தமிழில் பேச உடனுக்குடனான மொழி பெயர்ப்பு வசதி செய்யப்பட வேண்டும்.
7.தமிழில் கடிதம் எழுதவும், அதற்கான பதிலைத் தமிழில் பெறவும் தமிழக அரசுக்குள்ளஉரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்பு வசதிகள் மத்திய அரசில் இருக்க வேண்டும்
8.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தமிழில் இயங்க வேண்டும்.
9.சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பது ரத்து செய்யப்பட்டு அங்கே தமிழ் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
10.மொழியோடு சம்பந்தப்பட்டது கல்வி. அதைப் பொதுப்பட்டியலுக்கு கொண்டு போய் இந்தியைத் திணிக்கிறார்கள், நீட்தேர்வு போன்றவற்றை நம் மீது சுமத்துகிறார்கள்.எனவே கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
11.தமிழ் வளர்ச்சி தமிழர்கள் வளர்ச்சியின் முன்தேவை. எனவே தமிழக அரசு இதில் தனிக்கவனம்செலுத்த வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப தமிழை வளர்க்கும் வழிமுறைகளை தமிழறிஞர்கள், மொழி அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுடன் கலந்து பேசி ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கி அதை உளப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் எடுத்துக்காட்டுகளே. தோழர்கள் மேலும் செழுமைப்படுத்தலாம்.

Ramalingam Kathiresan

Leave A Reply