ஈரோடு, ஜூன் 18-
பணிப் பாதுகாப்பு கோரிக்கை மாநாட்டு விளக்கக் கூட்டம் ஈரோட்டில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நடைபெற்றது. மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்திட வேண்டும். செயல்படும் கடை ஊழியர்களுக்கு பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பணி பாதுகாப்பு கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

இதன் கோரிக்கைகளை விளக்கி ஈரோடு டாஸ்மாக் மாவட்ட மேலாளார் அலுவலகம் முன்பு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பொன்.பாரதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், வி.பாண்டியன், எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஜோ.சுந்தரம், செயலாளர் முத்துசாமி, எல்எல்எப் மாவட்ட தலைவர் கோபால், எல்எல்எப் செயலாளர் வெற்றிசெல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply