மன்னார்குடி
முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் கடைத்தெருவில் இருந்த டாஸ்மாக் சாராயக்கடையை அப்புறப்படுத்தும் சர்வகட்சி போராட்டம் வெற்றியடைந்தது. இது பற்றி முத்துப்பேட்டை ஒன்றிய சிபிஎம் தலைவர்களில் ஒருவரான எல்.டி. வீரசேகரன் தெரிவித்ததாவது இடும்பாவனம் கடைத்தெருவில் டாஸ்மாக் கடையை
மூடவேண்டும் என திருத்துறைபூண்டி வருவாய் நிர்வாகத்திற்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் கோரிக்கைகள் ஏப்ரல் மாதத்தில் அனுப்பப்பட்டி்ருந்தன. ஆனால் அந்தக் சாராயக்கடை தொடர்ந்து இயங்கியதால் கடந்த 5.5.2017 அன்று சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எல்.டி.வீரசேனன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் முற்றுகை போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் திருத்துறைபூண்டி வருவாய் வட்டாட்சியர் அழைப்பின் பேரில் சமாதானக்கூட்டம் நடைபெற்று விரைவில் கடை மூடப்படும் என எழுத்துபூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால் அவ்வாறு கடை மூடப்படவில்லை. எனவே ஞாயிறன்று 18.6.2017 டாஸ்மாக் கடையின் முன்பு கிராம மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த மனோகரன் தலைமை வகித்தார். சிபிஎம் தலைவர்கள் எல்.டி.வீரசேகரன், எஸ். பழனியப்பன், இடும்பாவனம், கற்பகநாதர்குளம் சிபிஎம் கிளை செயலாளர்கள் ஆர். ரெத்தினவேலு, பி. செல்லையன் உள்ளிட்டு இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் கலந்து காண்டனர். இப்போராட்டத்தின் போது டாஸ்மாக் நிர்வாகத்தின் மாவட்ட அலுவலர் ராஜகோபால் மற்றும் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்ட இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில் மூன்று தினங்களில் கடையை அப்புறப்படுத்துவதாக டாஸ்மாக் அலுவலர் ராஜகோபால் கூட்டத்தில் அறிவித்தார். எனவே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வீரசேகரன் தெரிவித்தார்.

Leave A Reply