கோவை, ஜூன் 19-
கோவை தண்ணீர்பந்தல் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை விளாங்குறிச்சி சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் டைட்டல் பார்க் அருகில் மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற ஆனையின்படி நெடுஞ்சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடையை அகற்ற உரிய நடவடிக்கைஎடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply