கோவை, ஜூன் 18-
கோவையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று கோவை ராம்நகரில் உள்ள பிரின்ஸ் கார்டனில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை இமாம் அல்ஹாஜ் அப்துல்ரஹீம், திருமுருகன் பூண்டி தவத்திரு சுந்தரராச அடிகளார், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி..ஆர்.நடராஜன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல்கபூர், சூப்பர் மெடிக்கல் உபைது ரஹ்மான், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.ஆறுமுகம், கருப்பையா, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட தலைவர் முகமதுமுசீர், செயலாளர் ஜெராம் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply