திருப்பூர், ஜூன் 19 –
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்துத்துவ மதவெறியர்களைக் கண்டித்தும், கோவை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் திருவேங்கடசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஊத்துக்குளியில் சிபிஎம் கிளை செயலாளர் பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ தாலுகா செயலாளர் பி.எஸ்.மணி, மதிமுக ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் கை.குழந்தைசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமுஎகச மாவட்ட துணை தலைவர் செ.நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கூடலூர் சேரம்பாடி பகுதியில் கே.ஜே.வர்க்கிஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சி.மணிகண்டன், சிபிஎம் சேரம்பாடி கிளை செயலாளர் எம்.கே.பாபு, வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகேஸ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ரஞ்ஜித், ராஜன், சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply