திருப்பூர், ஜூன் 18 –
கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தைக் கண்டித்தும், இதில் தொடர்புடைய சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) எஸ்.பவித்ராதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், துத்தாரிபாளையம் கிளைச் செயலாளர் சீனிவாசன், சுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலை கண்டித்து முழக்கமிட்டனர்.

குடிமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெ.ரங்கநாதன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட அவைத் தலைவர். ச.ராஜமாணிக்கம், தேமுதிக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட நிர்வாகி பெரியார்தாசன், ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி ஈழவேந்தன், மாதர் சங்க நிர்வாகி சசிகலா, விவசாய சங்க நிர்வாகி மோகன சுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதேபோல், சேலம் மாநகர வடக்கு குழு சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு வடக்கு குழு செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, மாநில குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவின் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.தர்மலிங்கம், ஜி.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சேலம் சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாதர் சங்கமாவட்ட செயலாளர் கே.ராஜாத்தி, மாவட்ட தலைவர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாதர் சங்க மேற்கு மாநகர செயலாளர் ஆர்.ஜெயமாலா, தலைவர் மகேஸ்வரி, பொருளாளர் ஏ.ராணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மதவெறிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave A Reply