ஈரோடு, ஜூன் 19-
பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளால் சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதியில் அருகில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் இயங்கி வரும் ரோஹிணி பிரீமியர், கே.ஜி.மில்ஸ் மற்றும் இதர சாய தொழிற்சாலைகளில் இருந்து வரும் சாய கழிவு நீர் மற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக நிலத்தில் விடப்படுகிறது. அவை நீர் நிலைகளில் கலப்பதால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகிறது.

மேலும், தொழிற்சாலையில் இருந்து வரும் கரும் புகை வீடுகளில் படிகிறது. கண் எரிச்சல், குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படுத்துகிறது. எனவே, இதுபோன்ற தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சி.எஸ்.நகர்இதேபோல், ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் கிராமம் சி.எஸ். நகர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பிளீச்சிங் மற்றும் சாயப்பட்டறையால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதால், அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.