சென்னை,

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடியது. இதில் எரிசக்தி , மதுவிலக்கு மற்றும் ஆயுதத்தீர்வை மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெறுகிறது. முன்னதாக , சுகாதாரத் துறை தொடர்பாக துணை கேள்வி எழுப்ப எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் முயன்றார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.  இதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply