கோவை, ஜூன் 18-
கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப் பணிக்கான முதல்நிலை போட்டி தேர்வில் 4,800 பேர் ஆபசென்ட்ஆகினர். கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் இத்தேர்வு நடை பெற்றது. தேர்வை முறையாக நடத்த துணை ஆட்சியர் தலைமையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள்  நியமக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஓவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் இத்தேர்விற்கு விண்ணப்பித்த 8,748 பேரில், 3,943 பேர் தேர்வு எழுதினர். 4,805 பேர் தேர்வு எழுதவில்லை. முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், கோவை மாவட்ட யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஆனந்தராஜ், விஷ்ணுபாட்டில் ஆகியோர் பிரசன்டேசன் பள்ளி, பிஎஸ்ஜி மேல்நிலைப்பள்ளி, நிர்மலா கலைக்கல்லூரி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave A Reply