மன்னா…

என்னா…?

போர் முடிந்துவிட்டது மன்னா..

முடிவு என்ன..?

நம் அணி தோற்றுவிட்டது மன்னா…

அப்படியா..சரி அவர்களை அந்த நாட்டுக்கே போய்விட சொல்லுங்கள்..

அய்யோ..மன்னா..அவர்கள் நம்நாட்டு பிரஜைகள் மன்னா…

அதலாலென்ன..!

அவர்களை எப்படி…அந்த நாட்டிடம்…???

இதுநாள்வரை நம் தேசத்திற்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்தவர்களை என்ன செய்தோம்..?

அந்த நாட்டுக்கு போ..என்றோம்..

இப்போதும் அதைத்தானே செய்யவேண்டும்…

அப்படியே ஆகட்டும் மன்னா. ஒரு சந்தேகம் மன்னா..?

என்னா..!

நம் நாட்டின் வளர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாம்.அதனால் உலகநாடுகளில் நமக்கு கெட்ட பெயராம்.அதற்கு காரணமான நீங்களும்…ம்ம்!….

ஹாஹாஹா…புரிகிறது…நானும் வெளிநாட்டுக்கு போ..எனச்சொல்ல வருகிறீர்..அதானே..

அய்யோ..நான் சொல்லவில்லை மன்னா..மக்களில் சிலர்தான் சொல்கிறார்கள்..

மக்கள் சொல்லை மகேசன் சொல்லாக மதிப்பவன் நான். அதனால்தான் தர்பாருக்குக்கூட வராமல் நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்..

மன்னா…

யாரங்கே..நெதர்லாந்து புறப்பட புஷ்பக விமானம் தயாராகட்டும்..

மன்னா….ஙெ ஙெ

– கருப்பு கருணா

Leave A Reply