மதுரை: மதுரையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் தீவிர வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் எஸ்பிஐ வங்கியில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையில் உள்ள வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து எஸ்பிஐ கிளைகளிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும் போன் மூலம் தகவல் கொடுத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply