சென்னை: எம் எல் ஏக்கள் குதிரை பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏகள் எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் பேசிய வீடியோ காட்சியை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதியன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட மன்றத்தின் சபாநாயகர் தனபால் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைதியநாதன் ஆகியோருக்கு 0 உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply