சாதியப் பாகுபாடுகள் ஒருபுறம் தீவிரமாகிக்கொண்டே போக, இன்னொருபுறம் தலித் சமூகத்திலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக அறிவிப்பதன் சூக்குமம் தெரிந்துகொள்ள முடியாததா?

மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள ஒருவரை, அனைவரும் ஏற்கத்தக்க வேட்பாளரை முடிவு செய்ய முன்வராமல் ராம் நாத் கோவிந்தை எதிர்த்தால் தலித் மக்களையே எதிர்ப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் சாமர்த்தியம் புரிந்துகொள்ள முடியாததா?

“நிச்சயம் பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறிவித்திருப்பது வெறும் எதிர்ப்புக்காக அல்ல. அரசமைப்பு சாசன மாண்புகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் வெளிப்பாடு அது.

-Kumaresan Asak

Leave A Reply