கோவை, ஜூன் 19-
கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதை கண்டித்து கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான துணிகளை அரசின் நிறுவனமான கோ-ஆப் டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட துணிகளுக்காக கொடுக்க வேண்டிய சுமார் ரூ.30 கோடியை இந்நிறுவனங்கள் தராமல் கடனில் வரவு வைத்துள்ளது.

இந்த பணத்தை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வசூலிப்பதற்கு பதிலாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் கோவையில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோ – ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.விஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply