கோவை, ஜூன் 19-
கோவை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் இலவச வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 2ம் உலகப்போரின் போது இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 202 பேருக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு மலுமிச்சம்பட்டியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வசதி இல்லாத காரணத்தால், இங்கு யாரும் வீடு கட்டவில்லை. இதனால் கடந்த 2000ஆம் ஆண்டு அரசு இந்த இடத்தை எடுத்துக் கொண்டது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டப்பட உள்ளது என்றனர். இது தொடர்பாக முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தோம். அப்போது அவர், உங்களுக்கு கட்டாயமாக குடிசை மாற்றுவாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பில், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தனி பிளாக் ஒதுக்கி தரப்படும் என்றார். இந்நிலையில் தற்போது எங்களுக்கு வீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவை விசாரித்த ஆட்சியர் உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Leave A Reply