‘சிட்டி, வசீகரனக் குத்து’ என்றதும் யோசிக்காமல் வந்து குத்தும் ரோபோவைப் போலத்தான் பார்ப்பனியம் சொல்வதை யோசிக்காமல் செய்யக் காத்திருக்கும் கிளிப்பிள்ளை ஆயுதம் ராம்நாத் கோவிந்த்..

(சிட்டிக்காவது Interval வர்றதுக்குள்ள மானரோசம் வந்துடுச்சி, ஆனா ராம்நாத் போன்ற ஆட்களுக்கு இன்னும் ரெண்டாயிரம் வருசமானாலும் அதெல்லாம் வராது)

அன்று சம்பூகனை அழிக்க ராமன் ஆயுதமாக்கப்பட்டான்.
இன்று சம்பூகனே ஆயுதமாக்கப்பட்டிருக்கிறான் அவ்வளவுதான்.

  • Lemurian Voice

 

யார் இந்த  சம்பூகன் ?

இந்து தர்மப்படி (!?) இராமன் ஆட்சி செய்கிற காலத்தில் சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அப்பொழுது வேதம்தான் பாடம். அதை படிக்கவோ, காதில் கேட்கவோ சூத்திரருக்கு உரிமையில்லை. அதனால்தான் பார்ப்பான் அழுதுக் கொண்டே ராமனை நோக்கி வருகிறான். ராமனைப் பார்த்து ராமா உன் ஆட்சியில் அக்கிரமம் நடக்கிறது என்றும் அக்ரகாரத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதற்குக் காரணம் சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

ராமன் காட்டிற்கு சம்பூகனிடம் சென்று தனது வலது கைக்கு ஆணையிடுகிறான். அவன் தலையை வெட்டு என்கிறான். அவன் தலை வெட்டப்படுகிறது. அவன் உயிர் பிரிந்தது. உடனே அந்த பார்ப்பனக் குழந்தை உயிர்த்தெழுந்ததாம்.

இராமன் சம்பூகன் என்பவனை கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது அதற்கு காரணம் அவன் சூத்திரன். ( உத்திர காண்டம், அத்தியாயம் 76 )

ராமன் பார்ப்பன ஆதிக்கத்தின் அடையாளம் என்றால்
சம்பூகன் பார்ப்பன எதிர்ப்பின் அடையாளம்.

Leave A Reply