நாமக்கல், ஜூன் 18-
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாணவர் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா ஞாயிறன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் குழுவின் சார்பில் மாவட்டம் முழுவதும் 400 கிராமங்களில் மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா ஞாயிறன்று நாமக்கல் சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட துணை தலைவர் சி.சந்திரகலா, எம்.தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் சி.எம்.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். எஸ்எப்ஐ மத்திய நிர்வாக குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் துவக்கவுரை ஆற்றினார். எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர் சங்க நிர்வாகிகள் பி.இளங்கதிர், ஆர்.சக்தி, எம்.ரஞ்சித்குமார், ஜீ.பூவரசன், எஸ்.கணேசன், ஆர்.பாரத் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காயத்ரி நன்றி கூறினார்.

Leave A Reply