ராஞ்சி,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை ரசிகர்கள் தீயிட்டு கொழுத்தினர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஞ்சியில் உள்ள தேனியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா இரண்டாவது சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் தோனியின் வீட்டை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply