ஏன்டா மொக்கச்சாமி.. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல..
——————————————————————————————

அண்ணன் சுப.உதயகுமார் அவர்களிடம் சினிமா நடிகர் ரஜினியின் ரசிகர் கூட்டம் நடந்து கொண்ட முறை அயோக்கியத்தனமானது. வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த கும்பலுக்கு இது புதுசு அல்ல..
நானே முன்பு ஒருமுறை இந்த கும்பலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

ரஜினியின் லிங்கா படத்திற்கு செய்த அலப்பரைகளை விமர்சித்து இந்த கார்ட்டூனை குமுதத்தில் வரைந்திருந்தேன். என் பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருந்தேன்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை.. மொத்தமாக வந்து என்னை அசிங்க அசிங்கமாக எழுதினார்கள்.

கருணா ஜெயாவில் ஆரம்பித்து சோனியா மோடி என்று அதிகார மையங்களை கடுமையாக விமர்சித்து கார்ட்டூன் வரைந்திருக்கிறேன். அப்போதும் எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறேன்.. ஆனால் ரஜினி ரசிகர்கள் என்றப்பெயரில் வந்த கும்பல் செய்த அட்டகாசம் போல் அல்ல..

மொத்தமாக என் ஃபேஸ்புக் பக்கம் போலியானது என்று ஆயிரக்கணக்கானவர்கள் புகார் அனுப்பவே சில மணிநேரத்தில் என் பக்கம் ஃபேஸ்புக்கால் முடக்கப்பட்டது.

என் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியும் எனக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை.

ஒரு மாதத்திற்குப்பிறகு Cartoonist Bala என்று இருந்த என் பேஸ்புக் ப்ரொபைலில் இருந்து என் அடையாளமான கார்ட்டூனிஸ்ட் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுதான் கொடுத்தார்கள். மிகப்பெரும் இழப்பு அது எனக்கு.

அதுபோல் இப்போது அண்ணன் சுப உதயகுமாரிடம் தங்கள் அராஜகத்தை காட்டியிருக்கிறார்கள். அந்த மூடர் கூட்டத்துடன் ரஜினி முகமூடி மாட்டிக்கொண்டு தமிழகத்திற்குள் காலடி வைத்துவிடலாம் என்ற கனவில் மிதக்கும் டவுசர் கூட்டமும் சேர்ந்து ரகளை செய்திருக்கிறது. தாக்க முயன்றிருக்கிறது..

அதுமட்டுமல்ல.. இப்போது என்னிடம் நடந்து கொண்டதைப்போலவே அவர் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச கமெண்டுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் உங்களின் தரம்.. அவ்வளவுதான் நீங்களும் உங்கள் தலைவனும். மொக்கச்சாமி வடிவேலுபோல் ஆரம்பிப்பதற்கு முன்னமே இவ்வளவு அலப்பரை கூடாது.

உங்கள் நமத்துப்போன பொட்டுவெடி அரசியலுக்கு வரட்டும்.. அல்லது வராமல் போகட்டும்.. அரசியல் எனும் பொது தளத்திற்கு வந்தால் மாற்று பார்வை கொண்டவர்கள் விமர்சிக்கதான் செய்வார்கள்.

ரஜினி குறித்த விவாதத்தில் எல்லோரும் ரஜினிக்கு ஆதரவாகவே பேசுவார்களா என்ன..

அண்ணன் சுப உதயகுமார் அவர்களுக்கு தமிழர்களுக்கான ஒரு போராட்ட வரலாறு இருக்கிறது.

தமிழனிடம் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசை ஏமாற்றி வாங்கியதை தவிர உங்கள் தலைவன் ரஜினிக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது..

சொல்லுங்கள் என்ன சம்பந்தமிருக்கிறது..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா

Leave A Reply