தில்லி:
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செவ்வாய் கோள் ஆயிரமாவது நாளை கடந்துள்ளது.

இந்திய விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் என்ற செவ்வாய்கோள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் புவிசுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக ஆயிரமாவது நாளை கடந்துள்ளது. பிஎஸ்எல்வி சி-25 மூலம் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ல், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதில், ஆறு மாத செயல்திறன் கொண்ட இந்த மார்ஸ் ஆர்பிட்டர், ஆயிரம் நாட்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply