தில்லி ,

தில்லி அரசு மருத்துவமனை உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக அறிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியின் பதர்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு  சப்தர்ஜங்  அரசு மருத்துவமனையில் ஞாயிறன்று காலையில் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாததால் , குழந்தை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் , குழந்தையின் உடலை  உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் தாயின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். குழந்தையை பெற்றுக் கொண்ட தந்தை ரோகித் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக எடுத்து சென்றனர். அப்போது ரோகித்தின் சகோதரி , குழந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த பை அசைவதை கண்டு ,  பையை பிரித்து பார்த்தனர். அப்போது குழந்தை மூச்சு விட்டதுடன்,  கை, கால்களை அசைப்பதும் தெரியவந்தது. உடனே குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் ரோகித் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply